மலையகப் பகுதியிலும் இதனை விரைவாக முன்னெடுங்கள்! இராதாகிருஷ்ணன் கோரிக்கை

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஜனாதிபதியின் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் மலையக பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் மிகவும் வேகமாக போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த புதிய கட்டிடத்திற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டிருந்ததுடன், பாடசாலை உபகரணங்களுக்காக 8 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கந்தப்பளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களுடைய மாணவர்களை பாதுகாத்து கொள்ள பெற்றோர்கள் மிகவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதே நேரம் பொலிஸாருக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இதனை மலையகத்தில் இருந்து இல்லாதொழிக்க முடியும்.

மலையகத்தில் எதிர்வரும் சில மாதங்களில் பல பாடசாலை புதிய கட்டடங்களை திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நான் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நான் பாடசாலைகளில் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியிருந்தேன். அதன் கட்டட நிர்மாண வேலைகள் தற்பொழுது நிறைவடைந்து வருகின்றது.

அவற்றை எனது தலைமையில் திறந்து வைக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருக்கின்றார். மேலும் நான் தற்பொழுது வகிக்கின்ற விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் பாடசாலை அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.

இன்று நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு ஜனாதிபதி பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதனை நான் வரவேற்கின்றேன். இந்த திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த வேண்டுமாக இருந்தால் பொலிஸாருக்கு அதிகாரங்களை அதிகளவில் கொடுக்க வேண்டும்.

விசேடமாக மலையகத்தில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அதற்கென தனியான ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை இல்லாதொழிக்க முடியும்.

அதற்கு பெற்றோர்களினதும், மலையக இளைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers