வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அட்டகாசம்

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியினரின் மிரட்டலால் மீண்டும் அதே இடத்தில் பிரதமர் ரணில், அமைச்சர்களான சஜித், றிசாட் ஆகியோரின் பதாதைகளை வவுனியா நகர சபையினர் நிறுவியுள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியில் நகரசபையின் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டிருந்த பிரதமர் ரணில், அமைச்சர்களான சஜித், றிசாட் ஆகியோரின் பதாதைகளையே நகரசபையினர் நேற்றைய தினம் அகற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பதாதைகளையும், வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலும் அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்த பதாதைகளையும் அகற்றியுள்ளனர்.

தொடர்ந்தும் சம்பவ இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நகரசபை உறுப்பினர் ஜானக மற்றும் அக் கட்சி உறுப்பினர்கள் சிலர் வருகை தந்ததுடன் அகற்றப்பட்ட பதாதைகளை கொண்டு சென்ற நகரசபை வாகனத்தை செல்ல விடாது தடுத்ததுள்ளனர்.

குறித்த பதாதைகளை மீளவும் அதே இடத்தில் நிறுவ கூறி மிரட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவிப்பதாகவும் தெரிவித்து குறித்த பதாதைகளை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறும் அச்சுறுத்தியமைக்கு அமைய மீண்டும் பதாதைகள் நிறுவப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகர சபையினர் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் செயற்பாடு குறித்தும் விசனம் தெரிவித்துள்ளனர்.