நாடு பொருளாதார அனர்த்தத்திற்கு எதிர்நோக்கும்! விஜயதாச ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

2019ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் அனர்த்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட வருடமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த காரணத்தினால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் டொலர்களின் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் மூன்றில் ஒன்றாக அதிகரித்தது.

இந்த ஆண்முடு கடன் தவணை மற்றும் வட்டியாக 2 ஆயிரத்து 200 பில்லியன் ரூபாயை செலுத்தி, அரச சேவை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றையும் செலுத்திய பின்னர், அபிவிருத்திக்கு நிதி மீதமிருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

இந்த ஆண்டு கடனை செலுத்த வேண்டுமாயின் அரசாங்கம் மேலும் வெளிநாட்டு கடனை பெற்றுக்கொள்ள நேரிடும். இதனால், இந்த ஆண்டின் இறுதியில் நாடு பொருளாதார ரீதியில் பாரிய அனர்த்த நிலைமைக்கு செல்லும் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, மேற்கொள்ளப்படாத அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை முன்வைத்து மக்களின் அனைத்து பிரச்சினைகள் புறந்தப்பட்டு வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ச, ஊடகங்கள் மற்றும் மக்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் சிறுப்பிள்ளை தனமாக நடந்துக்கொள்கின்றனர் என்பதை அரசாங்கம் அறியும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக உணரும் பிரச்சினையை கீழடிப்பு செய்யும் அரசியலமைப்பு அறிக்கை ஒன்றை கொண்டு வந்து, நாட்டில் காணப்படும உண்மையான பிரச்சினை மறைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.