கோத்தபாய சிறந்த அரசியல்வாதியா?

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சி பல பொய்களை சமூகமயப்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கு பொய்களை கூறி, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக உணர்த்த முயற்சித்து வருகின்றனர். எந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் நாட்டுக்கு உகந்த வகையில் உருவாக்கப்படும். எந்த வகையிலும் நாட்டு விரோதமாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட மாட்டாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து கொண்ட அரசியலமைப்புச் சட்டமாக அது இருக்கும். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என அனைத்து அரச தலைவர்களும் இதனை தெளிவாக கூறியுள்ளனர் எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது சவாலா இருக்குமா என செய்தியாளர் ஒருவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காவிந்த ஜெயவர்தன,

ஐக்கிய தேசியக் கட்சி தேவையான நேரத்தில் நன்றாக அரசியல் தெரிந்த குதிரை போட்டியில் இறக்கும். கோத்தபாய ராஜபக்ச சிறந்த அதிகாரி என்பதை அறிவேன். அவர் சிறந்த அரசியல்வாதியான என்பது இன்னும் தெரியாது.

தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலில் களம் இறங்குவோம் எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.