சிங்கப்பூர் உடன்படிக்கையில் சில குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உருவாக்கப்படும் போது, இலங்கை தரப்பில் சில குறைபாடுகள் நடந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியெங் லுன் ஆகியோர் இடையில் இன்று நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பிரச்சினைகளை சரிசெய்ய தேவையான சில திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

போதைப் பொருளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பொதுமான உதவிகள் வழங்கப்படும் என சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.