மீண்டும் தேசிய அரசாங்கம்? எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இணக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமையின் அடிப்படையில், மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக எதிர்க்கட்சியை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசசுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் இரண்டு தரப்பும் சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க இந்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.