அரசியலமைப்பு பேரவையினால் ஏற்பட்ட மாற்றம் பற்றி கூறும் பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் காரணமாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு பேரவை தொடர்பாக எதிர்க்கட்சி சுமத்தி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுயாதீனமான நீதிமன்றம் உள்ளது. உயர் நீதிமன்ற கடந்த டிசம்பர் மாதம் வழங்கிய நீதியான தீர்ப்பை பொருத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு பேரவை மீது தற்போது குற்றம் சுமத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களை அவர்களின் சமயத்தை கூறி விமர்சிக்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட விதத்தை மக்கள் மறக்கவில்லை.

எனினும் தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு பேரவையின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அனைத்து நியமனங்களையும் வழங்குகிறது. இறுதி தீர்மானம் நாடாளுமன்றத்திடமே உள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.