படையினர் போர் குற்றங்களில் ஈடுபடவில்லையென்றால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்!

Report Print Murali Murali in அரசியல்

இறுதி யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை என்பதை தகுந்த சான்றுகள் மூலம் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக தேசப்பற்றாளர் இலங்கையர் மன்றம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அந்த அமைப்பினர் கருத்து வெளியிடுகையில், “திடமான சான்றுகளை முன்வைத்து, சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நீக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக வேண்டும்.

எவ்வாறாயினும், நாட்டில் பிளவுகள் ஏற்படாத ஆட்சி நிலை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers