சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! மகிந்த தரப்பிற்கு எதிராக களமிறங்கும் மெகா கூட்டணி!

Report Print Murali Murali in அரசியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கூட்டணியில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 தொகுதி அமைப்பாளர்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 33 பேர் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும், ஏனைய 53 பேர் தமது ஒத்திழைப்பைக்களை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்தப்படாது, ராஜபக்‌ஷாக்களில் ஒருவர் முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அந்த நபரை தோற்கடிப்பதற்கு தமது முழு பலத்தையும் பயன்படுத்தி போராடுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு எதிரான அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ராஜபக்‌ஷாக்களுக்கெதிரான போராட்டத்தை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட்ட ராஜபக்‌ஷர்க்களுக்கு எதிராக செயற்படுகின்ற அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது

Latest Offers