ஜனாதிபதியின் சிங்கப்பூர் விஜயத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிங்கப்பூர் விஜயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமை குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது அவர் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களையே வெகுவாக அழைத்து செல்கின்றார்.

அண்மையில் பிலிப்பைன்ஸிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையே அழைத்து சென்றிருந்தார்.

தற்போது மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் விஜயத்தின் போதும் எதிர்க்கட்சி நடாளுமன்ற உறுப்பினர்களே ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

எஸ்.பி. திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, மொஹான் லால் க்ரேரு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஜயங்களில் இணைந்து கொண்டுள்ளனர்.

பொதுவாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்களை அழைத்து செல்வது மரபு என்ற போதிலும் ஜனாதிபதி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையே அழைத்து செல்வதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.