பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து அமைச்சர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சர்கள் இருவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் 28ஆம் திகதி இடம்பெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது ரிஷாத், மாணவர்கள் தவறுதலாக இவ்வாறான செயலை மேற்கொண்டிருப்பதாகவும், எனவே குறித்த மாணவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.