மைத்திரிக்கு சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடியாது! குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த புதிய தலைமைத்துவம் அவசியம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம பேசும் போதே வெல்கம இதனை கூறியுள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகிய கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் தற்போதைய தலைமைத்துவம் அவ்வாறு செயற்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த புதிய தலைவர் அவசியம் என நான் நினைக்கின்றேன்.

பண்டாரநாயக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க பாதுகாத்தார். அதற்கு பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பாதுகாத்தார். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச சிறப்பான முறையில் கட்சியை பாதுகாத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சியை பற்றி சரியாக சிந்திப்பதில்லை. அந்த கட்சிக்கு புதிய தலைமை அவசியம். அந்த புதிய தலைமையுடன் ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

நான் கடந்த 36 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இறப்பேன்.

உண்மைகளை கூறும் போது, சிலர் நான், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.