அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணையும் மக்கள்! மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணித்திரண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள அபயராம விகாரைக்கு இன்று சென்றிருந்த போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாது, நாட்டை துண்டுகளாக உடைத்து காட்டிக்கொடுக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில், மக்கள் அதனை முற்றாக எதிர்க்கின்றனர்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை முன்வைக்க முடியாது.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இன்மையே இதற்கு காரணம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.