மகிந்த - மைத்திரி அணியில் இணையுமாறு ஜே.வி.பிக்கு அழைப்பு!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து உருவாக்கும் கூட்டணியில் இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு, சமூக, கலாசார, சமய மற்றும் அரசியல் ரீதியாக பாரதூரமான வகையில் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு, அந்த தேர்தல் மாகாண சபைத் தேர்தலாகவோ, பொதுத் தேர்தலாகவோ அல்லது ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் 48 கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணியை ஏற்படுத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு அழைப்பு விடுக்கின்றேன் என மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.