ஊடகத்துறை அமைச்சு பதவி வேறு ஒருவருக்கு!

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் மங்கள சமரவீ தற்போது வகித்து வரும் அமைச்சு பதவிகளில் ஊடகத்துறை அமைச்சை அவரிடம் இருந்து நீக்கி, அந்த அமைப்பு பொறுப்பில் வேறு ஒருவரை நியமிப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அல்லது மங்கள சமரவீர அந்த அமைச்சு பதவியை வகிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சுக்கு முழுமையான அதிகாரம் உள்ள அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சரை நியமிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர தற்போது நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அதிக அரச நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில அமைச்சுக்களில் மங்கள சமரவீர வகித்து வரும் அமைச்சுக்களும் அடங்கும்.

Latest Offers