சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது! அமைச்சர் மனோ கணேசன்

Report Print Murali Murali in அரசியல்

சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை, தேசிய தினக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

“அரசமைப்பின் 8ம் சரத்தில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்தார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை.” என அமைச்சர் மனோ கணேசன் கூறியிருந்தார்.

இதேவேளை, அரசியல் அமைப்பின் பிரகாரம், இனிவரும் காலங்களில், ​பெப்ரவரி மாதம் 4ம் திகதி, தேசிய தினமாகக் கொண்டாடப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்தார்.

அத்துடன், பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமேயன்றி, அது சுதந்திர தினம் அல்ல என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.