தமிழரசு கட்சியின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்! யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்

Report Print Rakesh in அரசியல்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23,24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே தேசிய மாநாடு நடத்தும் திகதிகள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காலத்தின் தேவைக்கேற்ப பெருமெடுப்பில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.