மாகாணத்திற்காக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு குழப்பமடையும்

Report Print Kamel Kamel in அரசியல்

ஒரு மாகாணத்திற்காக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் ஒட்டுமொத்த நாடும் குழப்பமடையும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உலக இலங்கை அமைப்பின் தலைவர் சுனில் சந்திரகுமார உள்ளிட்ட தரப்பினர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அண்மையில் சந்தித்த போது அவர் இதனைக் குறிபிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டுக்கு இந்த மாதிரியான ஓர் புதிய அரசியல் அமைப்பு அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான அரசியல் அமைப்பினால் நாட்டின் நல்லிணக்கமும் சகவாழ்வும் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அரசியல் அமைப்பினை வேறு மாகாணங்கள் கோரவில்லை எனவும், ஒரு மாகாணம் மட்டும் கோருவதற்காக அவசர அவசரமாக ஏன் அரசியல் அமைப்பினை கொண்டு வர வேண்டுமென மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.