மத்தள விமான நிலையத்தின் 70 வீத பங்குகள் இந்தியாவுக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

ஹம்பாந்தோட்டை மத்தள பிரதேசத்தில் உள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் பங்குகளில் 70 வீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க உள்ளதாக தெரியவருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதால், சமநிலையை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட உள்ள உடன்படிக்கையின் படி இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கும் இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும் இடையில் பங்குகள் பகிரப்பட உள்ளன.

நஷ்டத்தில் இயங்கி வரும் மத்தள விமான நிலையத்தின் பங்குகளில் 70க்கும் குறைவான பங்குகளை பெற இந்தியா இணங்காது என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அதிகளவான பங்குகளை பெற்றுக்கொண்டால், மத்தள விமான நிலையத்தினால், இலங்கைக்கு ஏற்படும் நஷ்டம் குறையும் என கூறப்படுகிறது.

விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 99 வருடங்களுக்கு வழங்குமாறு இந்தியா கோரியுள்ள போதிலும் அதனை 40 வருடங்களாக குறைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.