அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில்

Report Print Steephen Steephen in அரசியல்

சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல், வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நிறுத்தப்படுவார் என்றும் முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் கடமையாற்றியவர், பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக தெரிவானவர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார். அப்போது யார் பலமிக்கவர்கள் என்பதை நாங்கள் காட்டுவோம் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் தெரிவித்துள்ளார்.