ஐ.தே.கட்சிக்கும் மைத்திரிக்கும் இடையில் திரைமறைவு பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியின் உதவியுடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய் கிழமை இரவு, கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதுடன் அதில் ஜனாதிபதியின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவரும் கலந்துக்கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து, இரண்டு தரப்பினரும் இணைந்து, தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பேச்சுவார்த்தைகளும் இதன் ஊடாக திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாகாண சபைத் தேர்தல் மட்டுமின்றி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.