மீண்டும் மகிந்த அணிக்கு தாவிய மைத்திரி அணியின் உறுப்பினர்!

Report Print Steephen Steephen in அரசியல்

வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் சுசில் குணரத்ன இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி அணியில் அங்கம் வகித்த சுனில் குணரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால அணியை சேர்ந்த பேசல ஜயரத்ன, வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது, அவருடன் இணைந்து மாகாண அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார்.

வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், மீண்டும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துக்கொண்ட சுசில் குணரத்ன, இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதவாச்சி தொகுதி அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் கே.எச். நந்தசேனவுடன் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவை சந்தித்து பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டார்.