இனவாதத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்க வேண்டாம்! கபீர் ஹாசிம்

Report Print Steephen Steephen in அரசியல்

உரிய நிலைப்பாடுகள் மற்றுத் கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வர முயற்சிக்குமாறும் இனவாதத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிளவுப்படுத்த போவதாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அப்படியான எந்த சம்பவங்களும் நடக்கவில்லை.

நாட்டை பிரிக்க வேண்டும் எனக் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே முதல் முறையாக ஒற்றையாட்சி நாட்டுக்குள் அரசியல் தீர்வை பெற இணங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால், சர்வதேசத்தில் இருக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களை குறைக்க முடிந்ததுள்ளது. இலங்கை படையினருக்கு சர்வதேச ரீதியில் இருந்து வந்த அழுத்தங்களை எமது அரசாங்கத்தின் காலத்திலேயே இல்லாமல் செய்ய முடிந்தது எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.