கொழும்பு சென்றதும் அனைவரையும் பிடிக்கப் போகிறார்கள்! யாழில் மிரட்டிய மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி தெரிவித்த நகைச்சுவையான கருத்து தென்னிலங்கை ஊடகங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

கொழும்பு சென்றதும் மருதானை ரயில் நிலையத்தில் வைத்து டிக்கட் இல்லையென அனைவரையும் பிடிக்கப் போகிறார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரதத்தில் இருந்தபடி ஜனாதிபதி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை - காங்சேன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவை இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமானது.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணிகளுடன் பயணித்தார்.

இதன்போதே அவர் சிரித்தபடி "இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லோரையும் பிடிக்கப் போகின்றார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்" என நகைச்சுவையாக தெரிவித்தார்.