என்னால் தனித்து அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர முடியாது! பிரதமர் தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு கொண்டு வர தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறைந்தது ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு அரசியல் கட்சியை கொண்டு வர முடிந்துள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நாட்டை பிரிக்கும் தேவை எவருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, என்னால் தனித்து புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர முடியாது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து யோசனைகளும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தால் நிறைவேற்றுவதா இல்லையா என்ற முடிவு நாடாளுமன்றத்திடம் உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.