எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு!

Report Print Ajith Ajith in அரசியல்

வெளிநாடுகளுக்கு அரசாங்க பிரதிநிதிகளையா அல்லது எதிர்க்கட்சி பிரதிநிதிகளையா அழைத்துச்செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்ட போது வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவை தவிர அவர் அழைத்துச்சென்ற அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாவர்.

இந்தநிலையில், இது ஒரு நகைச்சுவை அம்சமாக மாறியுள்ளதாக ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசமுறை விஜயம் ஒன்றின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு அரசாங்கத்தின் கொள்கைகளை கூறமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், பிலிப்பைன்ஸ் விஜயம் அரசுமுறை விஜயம் என்பதால் அதில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இதேவேளை, அண்மையில் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி மேற்கொண்ட விஜயம் தனிப்பட்ட விஜயமாகும். எனவே அதில் திலக் மாரப்பன சேர்க்கப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.