இந்திய அரசாங்கத்திடம் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு காலத்தின் அவசியம் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அத்துடன், இன ஐக்கியத்துடனான ஐனநாயகத்தினை கட்டியெழுப்ப இந்திய அரசாங்கம் எப்போது இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணை வழங்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் 70வது ஆண்டு குடியரசு தின ஒன்றுகூடல் யாழ். தனியார் விடுதியில் இந்திய உதவித்துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கட்டியெழுப்ப தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டும். பாரம்பரிய கலை, கலாசார, தமிழ் பண்பாட்டினை தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

எனவே அவ்வாறான ஒரு இயல்பான பண்பாட்டினை வழங்க இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் உதவும் என எண்ணுகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.