தனித்து போட்டியிட்டால் தாமரை மொட்டு ஒருபோதும் மலராது!

Report Print Murali Murali in அரசியல்

தனித்து போட்டியிடுவதாக இருந்தால் தாமரை மொட்டு ஒருபோதும் மலராது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கூட்டணி அமைக்காத எந்தக் கட்சியாலும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. அது பொதுஜன பெரமுனவாக இருந்தாலும் சரியானதே.

தாம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் எனவும், இனி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என பொதுஜன பெரமுனவிலுள்ள யாராவது பெருமை பேசவேண்டாம்.

அவ்வாறு பேசுவதாக இருந்தால், நிச்சயம் அது அவருக்கும் தோல்வி என்றே கூற வேண்டியுள்ளது.

இந்நிலையில், தனித்துப் போட்டியிடுவதாக தாமரை மொட்டு உறுப்பினர்கள் அடம்பிடித்தால், அந்த மொட்டு மலராது என்றே கூற வேண்யுள்ளது என மேலும் கூறியுள்ளார்.