உத்தரதேவியில் யாழ். சென்ற அமைச்சர்! பொன்னாடை போர்த்தி வரவேற்ற மாவை

Report Print Sumi in அரசியல்

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்த புதிய S13 ரயில் உத்தரதேவி கொழும்பு- யாழ்ப்பாணம்-காங்கேசன்துறைக்கு இடையில் தனது பயணத்தை இன்று ஆரம்பித்தது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு வருகை தந்துள்ளது.

இந்த ரயில் சேவையை காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூனரணதுங்க, இந்தியத்துணைத் தூதுவர் தரஞ்சித் சிங் இணைந்து ஆரம்பித்தனர்.

இதன்போது, உத்தரதேவியில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இவ் விஜயத்தின்போது கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப ரயில் நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.மாநகர மேஜர் ஆனோல்ட், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதேவேளை, இந்த புதிய ரயில் உத்தரதேவி எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.