ஜோன் அமரதுங்கவுக்கு கன்னத்தில் அறையும் வகையில் நடந்து கொண்ட ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் கன்னத்தில் அறையும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜோன் அமரதுங்கவினால், மேற்கொள்ளப்பட்ட இரண்டு சபைகளின் தலைவர்களுக்கான புதிய நியமனங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறுதிநேரத்தில் தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதி 11வது மணித்தியாலத்தில் இந்த நியமன ரத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் பேரவை ஆகியவற்றுக்கான தலைவர்களின் நியமனங்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படவிருந்தன.

எனினும் இந்த நியமனங்கள் தொடர்பில் ஜோன் அமரதுங்க, பிரதமருடன் கலந்தாலோசிக்கவில்லை.

இந்தநிலையில் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையிலேயே அது பிரதமர் அலுவலகத்தினால் தடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிகழ்வு நிறுத்தப்பட்டதாக இதன்போது அமைச்சர் ஜோன் அமரதுங்க காரணம் கூறியுள்ளார்.