கோத்தபாயவை காப்பாற்ற மைத்திரியின் சகோதரர் அதிரடி நடவடிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவை தாம் காப்பாற்ற முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது தந்தையின் நினைவுத்தூபிக்காக 34 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த டட்லி சிறிசேன, கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஒரு சிறிய விடயம் என்று தெரிவித்துள்ளார்.

அது வெறுமனே 35 மில்லியன் ரூபாய்கள். இந்நிலையில் அந்தப்பணத்தை தாமே செலுத்தி கோத்தபாயவை, வழக்கில் இருந்து காப்பாற்ற நினைப்பதாக டட்லி சிறிசேன

குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்காக அவர் செய்த சேவைகளை கருத்திற்கொண்டே இந்த கருத்தை தாம் தெரிவிப்பதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...