அவுஸ்திரேலியாவில் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர்கள்! புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக டேவிட் ஹோலி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மாரிசீ பெய்ன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகள் மிக நீண்ட காலமாக நீடித்து வருகின்றது.

அவுஸ்திரேலியாவில் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர்கள் வாழ்ந்து வருவதுடன், அவர்கள் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி, கல்வி, சட்டவிரோத ஆட்கடத்தல் தவிர்ப்பு, எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் நீடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹோலி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.