படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்: மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

படையினரை, சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும், முக்கிய பதவிகளில் இருப்பவர்களை பதவிகளிலிருந்து உடனடியாக ஜனாதிபதி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் அல்லர். இராணுவத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்தால் அவர் குற்றவாளிதான்.

விருதுகளைப் பெற்றவர்கள்தான் போர் வீரர்கள். இரண்டு வாரங்களில் 11 படையினருக்கு எதிராக குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் சுமத்தப்படும்” என பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் மஹிந்த ராஜபக்ச இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதிகளை தோற்கடித்த எமது படையினர் அனைவரும் போர் வீரர்கள். அவர்களை தரம் குறைத்து அழைக்க முடியாது.

இப்படித் திறமை வாய்ந்த எமது வீரர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகமும், புலம்பெயர் புலி அமைப்பினரும் சுமத்தியுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?

எமது படை வீரர்களை உள்நாட்டு நீதிமன்றிலோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளியோம்.

படை வீரர்களை நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு நாம் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.