ஜனாதிபதி வேட்பாளர் தெரிவால் ராஜபக்சக்கள் இடையே மோதல்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்சக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தமது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஊடகத்திற்கு இன்று கருத்து வெளியிடும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 17 இலட்சம் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள்.

எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும். ஐ.தே.க இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகவே உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. குமார வெல்கம போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவை ஏற்று கொள்ள தயாரில்லை என தெரிவித்துள்ளார்.