ஜனாதிபதி வேட்பாளரது வெளிநாட்டு குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது!

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரது வெளிநாட்டு குடியுரிமை சம்பந்தமான பிரச்சினை தற்போது பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கோரும் சரியான நபர் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது தரப்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசாங்கமும் மேலும் பல தரப்பினரும் கடும் அச்சத்தில் இருப்பதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நிறுத்தப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சியின் வலியுறுத்தி வருகின்றனர்.