ஜனாதிபதியின் உத்தரவினால் நிறுத்தப்பட்ட தொலைக்காட்சி தொடர்

Report Print Steephen Steephen in அரசியல்

அரச தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் இலங்கையின் மிக நீண்ட தொலைக்காட்சி தொடரான கோப்பி கடை தொடரின் கடந்த வார பாகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

“கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் இந்த பாகம் தயாரிக்கப்பட்டிருந்தது. பைத்தியம் பிடித்த கிராம சேவகர் வாள் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொள்ளும் விதமாக காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கிராம சேவகரின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொலைக்காட்சி தொடரின் பாகம் தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பட உள்ளதாக ஜனாதிபதிக்கு அறிய கிடைத்துள்ளது.

இதனையடுத்து அந்த பாகம் ஒளிப்பரப்படுவதை நிறுத்தி விட்டு வேறு பாகத்தை ஒளிப்பரப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி, ஆரம்பத்தில் பொலன்நறுவையில் கிராம சேவகராக கடமையாற்றி வந்துள்ளதுடன் அது தனது முதலாவது அரச பணியாக அமைந்தது என ஜனாதிபதியும் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

கோப்பி கடை என்ற இந்த சிங்கள தொலைக்காட்சி தொடரின் பாகங்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.