போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு விரைவில் மரண தண்டனை

Report Print Gokulan Gokulan in அரசியல்

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

போதைப் பொருள் வர்த்தகமானது நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கான ஓர் சூழ்ச்சித் திட்டமாகவே கருதப்பட வேண்டும்.

போதைப் பொருள் வர்த்தகர்கள், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மலினப்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் அரசாங்க ஊழியர்களை மையமாகக் கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.