கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பது தொடர்பான விடயங்களை பிரதியமைச்சர் இதன் போது ஆளுநருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்திகளுக்காக தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பரஸ்பரமுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.