அரசியல் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தடையில்லை! யோஷித்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலில் பரஸ்பர கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அது தடையாக இருக்காது என யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யோஷித்த ராஜபக்ச, தனது சகோதரரின் திருமணம் நடைபெற்றதாகவும் அதில் அரசியல்வாதிகள் பலர் கலந்துக்கொண்டமையை சிறந்ததாக காண்பதாக கூறியுள்ளார்.

அரசியலில் பரஸ்பரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருக்கும் நபர்கள் என்ற வகையில் எவருடனும் தனிப்பட்ட ரீதியான பகை இருக்காது என நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தனது வழக்கு விசாரணை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யோஷித்த ராஜபக்ச, வழக்கு விசாரணைகள் நடந்து முடிய சில காலம் செல்லும் எனவும் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் தேவை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.