வடக்கு ஆளுநருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Report Print Murali Murali in அரசியல்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மாலை ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.