ஜனாதிபதி வேட்பாளர் யார்? விரைவில் மைத்திரி அறிவிப்பார்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாட உள்ளார்.

இதன் பின்னர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் என நாடாளுமன்ற உறுப்பிரன் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை யாராலும் பிரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பதுளையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், மகிந்த மைத்திரிக்கு இடையிலான நட்பு மற்றும் அரசியல் உறவுகளில் தலையிடுபவர்களின் முயற்சிகள் அனைத்து தோல்வியடையும் என்வும் கூறியுள்ளார்.