அமைச்சர் மனோ அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது சிறந்தது! மகிந்த அணி

Report Print Murali Murali in அரசியல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் அந்த மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் மனோ கணேசன் அரசாங்கத்தை விட்டு விலகுவதே சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் முற்போக்கு தீர்மானம் எடுத்தால் அது வரவேற்கத்தக்கதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டமைக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது விசனத்தை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்திலும் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும் அதற்கான சந்தர்ப்பத்தையும் ஐக்கிய தேசிய கட்சியே இல்லாமல் செய்தது. ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை.