41 மாதங்களில் 34 முறை வெளிநாடு சென்ற மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதாக அரசியல் மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி ஊடக பிரிவின் இணையத்தளத்தில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் தொடர்பில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 41 மாதங்களில் 34 சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.