கொழும்பில் பதுக்கி வைத்திருக்கும் பல இரகசியங்கள்! அம்பலப்படுத்தும் மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை தொடர்பான பெறுமதியான ஆவணங்கள் இரகசியமான முறையில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய காப்பக திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தொடர்பான பெறுமதியான ஆவணங்கள் அரசாங்கத்தின் எந்த விதமான அனுமதியுமின்றி வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் போதைப்பொருள் அற்ற நாடு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில பிக்குமார் பௌத்த மதம், புத்தரின் பிறப்பு தொடர்பில் பிழையான தகவல்களை அடங்கிய புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். இதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன.

கொழும்பிலுள்ள தேசிய காப்பக திணைக்களத்தின் தலைமையகத்தில் நாட்டில் வரலாற்று சொத்துக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எங்களால் பாதுகாக்கப்பட்ட யாருக்கும் தெரியாத இரகசியங்கள் உள்ளன.

கடந்த நாட்களில் அந்த திணைக்களம், அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி, எவ்வித இணப்பாடும் இன்றி வெளிநாடுகளுக்கு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பௌத்த மதத்தை பிழையாக பதிவிடும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. இன்னொரு பக்கம் வரலாற்று சான்றுகளை இல்லாமல் செய்யும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.