தமிழீழத்தை நேசித்த இந்திய மத்திய அரசியல் ஜம்பவான் மறைவு! கிளிநொச்சியில் அஞ்சலி

Report Print Yathu in அரசியல்

பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் மறைவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அத்துடன், இவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து கிளிநொச்சியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளையினால் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

பாரத தேசத்தின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் மதகுருவாகவும் சேவை செய்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், 1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது அதனை எதிர்த்தும் போராடியுள்ளார்.

இதேவேளை ஈழ விடுதலைப்புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1987ஆம்ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளைபுகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார்.

தமிழீழ ஆதரவாளரான இவர் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்து வரும் நிலையில், இவரின் இழப்பு தமிழர்களின் மனதை பெருமளவு பாதித்துள்ளது.

Latest Offers

loading...