அமெரிக்காவில் இருந்து மத்தளவிற்கு விமான சேவையை பெற்ற முன்னாள் தூதர்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரிய, இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு தெரியாமல், ஶ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மத்தள விமான நிலையத்துக்கு இந்த விமானம் அனுப்பப்பட்டது.

இதற்காக செலவான 7.8 மில்லியன் ரூபாவை வெளியுறவு அமைச்சுக்கு பாரப்படுத்தியதாகவும் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயாரில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இந்த சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயாரின் நிதி முகாமையாளர் கசுன் ரட்நாயக்க இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

இதேவேளை 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலம், வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் பொதுநலாவாய விளையாட்டுக்குழு ஆகியன இணைந்து 2006ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையில் 122.3 மில்லியன் ரூபாய்களுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவையை பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது.