ஆட்சியில் இருப்பது தேசிய அரசாங்கம்! துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது தேசிய அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தற்போதைய அரசாங்கத்தின் தலைவர். ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதால், அவர் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் காரணமாக தற்போது ஆட்சியில் இருப்பது தேசிய அரசாங்கம் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். இதனால், தேசிய அரசாங்கம் ஆட்சியில் இல்லை.

எனினும் ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவர் என்பதால், ஆட்சியில் இருப்பது தேசிய அரசாங்கம் என்பது எனது நிலைப்பாடு எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...