சீசெல்ஸின் உப ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Report Print Ajith Ajith in அரசியல்

சீசெல்ஸின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிட்டன் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீசெல்ஸ் நாட்டுக்கு கடந்த ஒக்டோபரில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டுக்கு இரண்டு கரையோர கண்காணிப்பு படகுகளை அன்பளிப்பு செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த படகுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காகவே சீசெல்ஸ் உபஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

Latest Offers

loading...