மைத்திரியை போராட்டத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கும் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முடிந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மகுடம், நாட்டினர் அல்லாதோருக்கு - பிரச்சினை நாட்டினருக்கு என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பங்கு கொள்ளக் கூடிய புதிய முன்னணி உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் .

நான் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்த போது, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த தீர்வு பொதியை எதிர்த்தேன்.

அப்போது அரசசார்பற்ற நிறுவனத்தினர் மக்கள் விடுதலை முன்னணியை இனவாதிகள் என்று கூறினர்.

தற்போது சந்திரிக்காவின் தீர்வு பொதிக்கு அப்பால் சென்ற தீர்வை ரணில் விக்ரமசிங்க கொண்டு வர முயற்சிக்கும் போது, அரசசார்பற்ற நிறுவனத்தினருடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணியினர் என்னை இனவாதி என்று குற்றம் சுமத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வரும் கோத்தபாய ராஜபக்ச, “நாட்டினர் அல்லாதோர்” பட்டியலுக்குள் வரும் அமெரிக்க பிரஜை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் அன்று சந்திரிக்காவின் அரசாங்கம் கொண்டு வந்த தீர்வு பொதியை உருவாக்கியவர் ஜீ.எல்.பீரிஸ் ஆவார். அப்போது அவரை வீரவங்ச “தீர்வு பொதி பப்பா” என அடையாளப்படுத்தினார்.

எனினும் தற்போது வீரவங்ச அங்கம் வகிக்கும் அணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...