ரணிலுக்கு எதிரான வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தொடரபட்டுள்ள வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பதில் தலைவரான நீதியரசர் தீபாலி விஜேசுந்தர இன்று அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், இந்த வழக்கு நாளைய தினம் மற்றுமொரு நீதியரசர்கள் அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான இந்த வழக்கை கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஷர்மிளா கோனவல தொடர்ந்துள்ளார்.